அறியாத வயதில் மணமுடித்து
ஆறேழு பிள்ளைகள் பெற்று புகுந்த வீட்டை
ஆயுள் முழுக்க அனுசரித்து
அற்புதமான உறவுகளை உருவாக்கி பிள்ளைகளின்
உடலைப்பேணி வளர்த்து பத்தாதென்று
இரண்டு மூன்று தலைமுறைக்கு உழைத்தின்று
படுக்கையிலேயே பாசப் பார்வை வீசும் தாயே செல்ல
தலைப்பிள்ளைக்கு சொல்வாயா உன் இதயத்தின் விலையை?
No comments:
Post a Comment