தாயின் கருவில் தனியே உதித்திருந்து..
தந்தையின் குரலை கேட்டு ரசித்திருந்து..
தொப்புள் கொடி வழியே
தப்பாமல் தன் பசி தானாய் தீர்ந்துவிட..
முழுவளர்ச்சியடைந்து பெற்ற விடுதலையால்
வயிற்றுப்பசி உயிரை வதைக்க முதன்முதலாய்
வாய் வழியே பால் உண்டு தன்னுயிர் காத்ததே
வாழ்வின் முதல் சாதனையாகுமே !
No comments:
Post a Comment