கண்கட்டு வித்தையோ இது என் மனம்
தறிகெட்டு ஓடுதே அவள் பின்னால்!
தறிகெட்டு ஓடுதே அவள் பின்னால்!
எனக்குப் பின் பிறந்தவள் தான் ஆனாலும்
என்னை ஆட்டிப் படைக்கின்றாள்!
இரும்பு மனம் படைத்த என்னை
இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கின்றாள்!
இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கின்றாள்!
உண்மையறியாமல் எதையுமே ஏற்காத என்
தனித்தன்மை இழந்து நிற்கின்றேன்!
என் மனதை நானுரைக்க
என்னவளை நாடினால்...
கட்டிளங்காளை என்னை மௌனத்தால்
கட்டிப்போட்டு ஓடுகிறாள்!
ஆராய்ச்சிக்கல்வியில் மூழ்கி
ஆராய்ந்து படித்துப் பெற்ற..
பட்டங்கள் என் பெயருக்கு பின்னால் நின்று
திட்டங்கள் போட்டு எனை கேலி பேசுதே!
நங்கையவள் மனம் படிக்க ஒரு
பல்கலைகழகமும் உள்ளதோ?
தனித்தன்மை இழந்து நிற்கின்றேன்!
என் மனதை நானுரைக்க
என்னவளை நாடினால்...
கட்டிளங்காளை என்னை மௌனத்தால்
கட்டிப்போட்டு ஓடுகிறாள்!
ஆராய்ச்சிக்கல்வியில் மூழ்கி
ஆராய்ந்து படித்துப் பெற்ற..
பட்டங்கள் என் பெயருக்கு பின்னால் நின்று
திட்டங்கள் போட்டு எனை கேலி பேசுதே!
நங்கையவள் மனம் படிக்க ஒரு
பல்கலைகழகமும் உள்ளதோ?
No comments:
Post a Comment