பற்கள்
பளிச்சிட....
கருமையான கண்களும்
கலந்து சிரித்துப் போட்டியிட.....
வில்போன்ற புருவம்
வீம்பு கொண்டு வானவில்லாய் மெருகேற்ற....
கன்னம் சிவந்து
கிண்ணத்துசாந்தாகிஇருந்தது!
எடுப்பான நாசி
துடிப்புடன் நிற்க...
இதழ்கள் இணைபிறிந்த சிரிப்பில் சிவப்பு ரோஜா
இதழ்களாய் குளிரவைக்க....
முகவாய் பளபளப்பில்
முழுமதியே போல் தோன்ற...
அயர்ந்துபோனேன்
அத்தனை அழகுககளுக்கும்
ஆதாரத்தை அறிந்துவிட்டதால்....
"ஆஹா... எவ்வளவு அழகு ??"
ஆன்லைனில் ஆர்வத்துடன் சொன்ன அம்மாவிற்கு
அளவாய் தலையசைத்து ஆமோதித்தேன் பிரமையில்!
அம்மாவின் புன்னைகையில்
என்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை மிளிர்ந்தது!
தங்கையும் சொன்னாள்
தாங்கவொண்ணா சந்தோஷத்தில்
"ஆல் தி பெஸ்ட் அண்ணா"
புதையலாய் எனக்கு கிடைத்த
பொக்கிஷம்...
கண்களில்
கர்வம் பொங்குகிறது!
கனவிலும்
காணக்கிடைக்காத அழகு...
இதோ இன்று
என் கைகளில்...
என் ஆராய்ச்சி கல்வியின் ஒளிமயமான
எதிர்காலமாக
எனக்கு கிடைத்திருக்கும்...
உலகையே ஆட்டிப்படைக்கப்போகும்
உன்னத அழகுள்ள
பழங்கால பெண்ணின் சிலை!
பளிச்சிட....
கருமையான கண்களும்
கலந்து சிரித்துப் போட்டியிட.....
வில்போன்ற புருவம்
வீம்பு கொண்டு வானவில்லாய் மெருகேற்ற....
கன்னம் சிவந்து
கிண்ணத்துசாந்தாகிஇருந்தது!
எடுப்பான நாசி
துடிப்புடன் நிற்க...
இதழ்கள் இணைபிறிந்த சிரிப்பில் சிவப்பு ரோஜா
இதழ்களாய் குளிரவைக்க....
முகவாய் பளபளப்பில்
முழுமதியே போல் தோன்ற...
அயர்ந்துபோனேன்
அத்தனை அழகுககளுக்கும்
ஆதாரத்தை அறிந்துவிட்டதால்....
"ஆஹா... எவ்வளவு அழகு ??"
ஆன்லைனில் ஆர்வத்துடன் சொன்ன அம்மாவிற்கு
அளவாய் தலையசைத்து ஆமோதித்தேன் பிரமையில்!
அம்மாவின் புன்னைகையில்
என்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை மிளிர்ந்தது!
தங்கையும் சொன்னாள்
தாங்கவொண்ணா சந்தோஷத்தில்
"ஆல் தி பெஸ்ட் அண்ணா"
புதையலாய் எனக்கு கிடைத்த
பொக்கிஷம்...
கண்களில்
கர்வம் பொங்குகிறது!
கனவிலும்
காணக்கிடைக்காத அழகு...
இதோ இன்று
என் கைகளில்...
என் ஆராய்ச்சி கல்வியின் ஒளிமயமான
எதிர்காலமாக
எனக்கு கிடைத்திருக்கும்...
உலகையே ஆட்டிப்படைக்கப்போகும்
உன்னத அழகுள்ள
பழங்கால பெண்ணின் சிலை!