பரவசப்படுத்தி தன் வசப்படுத்துகிறது
மலர்களின் வாசம்!
உரிமையாய் தென்றலும் வாசத்தை வாரிப்பூசி
உரைத்தது தான் பூங்காற்றென்று!
வண்டுகள் ரீங்காரம் செய்து உறுதிபடுத்தின
வளமான தன் வாழ்க்கையை!
வாசத்தை விலைபேசி
வாங்கிவிட விரும்பினர் பலர்!
தோட்டமிட்டவனின் திறமைகளை
நோட்டமிட்டனர் மனதில் வியந்தவாறே!
ஆளுக்கொரு செடி வாங்க எண்ணி
அனைத்து மலர்களுமே அழகாய் தோன்றி...
ஆசையை பெருக்கிட அலைந்தனர்
அங்குமிங்கும் குழப்பத்தோடு!
ஓரிரு செடிகள் வாங்கி
ஒய்யாரமாக சென்றனர் ஏக்கத்தை மறைத்து!
தோட்ட சொந்தக்காரனுக்கு கூட
தொலைவில் தான் மச்சுவீடு!
ஆனால்....
பணத்திற்க்காகத்தான் என்றாலும் நீரூற்றி
பராமரிப்பவனுக்கு மட்டுமே...
தோட்டப்பூக்களின் மொத்தவாசமும் என்றும் இலவசம்!!
No comments:
Post a Comment