பூவே உனைக்கண்டு நான்
பிரம்மித்து நிற்கின்றேன்!
வானின் மேகங்கள்
வள்ளல்போல் வந்து
மாரியதை பொழிந்திடவே
மண்ணும் குளிர்ந்து மணம் வீசியதே
சிறுவிதையும் துளிர்விட்டு
செடியாய் வளர்ந்து நின்றதே
கால்நடைகளின் பசிப்பிணியிலிருந்து தப்பிப் பின்னும்
கால்மிதிபட்டு அழிந்துவிடாமலும் பிழைத்து
மொட்டேந்தி பிறகின்று நீயும்
மலர்ந்திட்டாய்
மகரந்த சேர்க்கைக்கு துணை செய்ய நீயே
மணம் வீசி அழைப்பிதழும் அனுப்பிட்டாய்
வண்ணத்துப்பூச்சியின் வருகைகண்ட மகிழ்ச்சியில் -நீ
வந்த பாதையின் கடினங்கள் மறந்தனயோ?
சேர்த்துவைத்த தேனையெல்லாம் மொத்தமாய்
சொரிந்துவிட்டாயே!
பிரம்மித்து நிற்கின்றேன்!
வானின் மேகங்கள்
வள்ளல்போல் வந்து
மாரியதை பொழிந்திடவே
மண்ணும் குளிர்ந்து மணம் வீசியதே
சிறுவிதையும் துளிர்விட்டு
செடியாய் வளர்ந்து நின்றதே
கால்நடைகளின் பசிப்பிணியிலிருந்து தப்பிப் பின்னும்
கால்மிதிபட்டு அழிந்துவிடாமலும் பிழைத்து
மொட்டேந்தி பிறகின்று நீயும்
மலர்ந்திட்டாய்
மகரந்த சேர்க்கைக்கு துணை செய்ய நீயே
மணம் வீசி அழைப்பிதழும் அனுப்பிட்டாய்
வண்ணத்துப்பூச்சியின் வருகைகண்ட மகிழ்ச்சியில் -நீ
வந்த பாதையின் கடினங்கள் மறந்தனயோ?
சேர்த்துவைத்த தேனையெல்லாம் மொத்தமாய்
சொரிந்துவிட்டாயே!
Supe chithi
ReplyDeleteThank you chellam.
Delete