மட்டைப்பந்து விளையாடிய அண்ணனை
கைதட்டி கவாஸ்கர் என்றே முழங்கியதும்
பூவரச மரத்தின் நிழலில் இலை பறித்து
பீப்பீ செய்து வாசித்த கச்சேரிக்கு
தவிலாக வாளியை தட்டிய தம்பியும் என
தித்திக்கும் நினைவுகள் திரும்ப கிடைத்திடவே
வேண்டும் ஒரு வரம் எனக்கு
மீண்டும் என் பருவம் பால்யமாகிடவே!
No comments:
Post a Comment