வீரம்
நித்தமும் பலர் பலியானாலும் வெளியுலகில்
ஆயுதமின்றி பயணிக்கும் பெண்களின் துணிவு!
சிரிப்பு
பல்லாயிரம் உயிரனங்கள் வாழ்ந்தாலும்
மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம்!
மனம்
மகிழ்ச்சியில் நூறுகாதம் தாண்டியும் குதிக்கும்
சோகத்தில் ஆறுதலை வேண்டியும் நிற்கும்
அமைதி
மிருக மனம் அமைதியானால் மனிதனாகும் நல்
மனித மனம் அமைதியானால் தெய்வமாகும்!
No comments:
Post a Comment