விருந்தோம்பலில் உலகின் சிறப்பு மிக்க
விருதுகளைப் பெற தகுதி கொண்ட தமிழர்கள் நாங்கள்!
ஆங்கில புத்தாண்டே ஒருபோதும்
அந்நியமாய் உன்னை எண்ணமாட்டோம்!
மார்கழி குளிரிலும்
மாக்கோலமிட்டு அதில்
அழகிய வண்ணப்பொடிகள் தூவி, வாழ்த்துக்கள் எழுதி
அன்பாய் உன்னை வரவேற்கிறோம்!
மக்களனைவரும்
மனமகிழ்கிறோம் ஒரே நேரத்தில்!
உலகமே இணைகின்றது இன்று புது
உற்சாக சிந்தனையால்!
புதிய உலகத்தில் பிறந்தது போல்
புதிரான அனுபவத்துள்ளல் மனதில்!
எல்லோரும் நேர்மறையான
எண்ணங்கள் கொண்டு ஒரு மனதாய் வேண்டுகிறோம்!
நல்லவை நடக்க வேண்டும்!
நல்லெண்ணங்கள் பலித்திடல் வேண்டும்!
ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்!
உலகில் மனிதநேயம் பெருகிடல் வேண்டும்!
No comments:
Post a Comment