ஏனிந்த நாணம்?
கடந்துவரும் பாதைகள்
கடினமாக இருந்தாலும்..
நம்பிக்கை கொண்ட
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து..
புன்னகையோடு புவியையே வெல்வதை தானும்
பழக எண்ணி முட்செடியிலும் முகமலரும் ரோஜாவே..
தன்மீது தீராக்காதல் கொண்ட தலைவன் முன் வெட்கத்துடன்
தலைகுனிந்துவிடும் பெண்மைபோல் உனக்கும் ஏனிந்த நாணம்?
No comments:
Post a Comment