சிவமும் சக்தியும் பெற்ற
தவப்புதல்வன்!
ஆறுமுகம் கொண்டு
அறுபடை வீடும் கண்டு
சீரிய பெருங்குணங்களும்
வீரமும் ஒருங்கே பெற்ற
தமிழ்க் கடவுளென
ஒளவையே மொழிந்துவிட்டபின்
தந்தைக்கே உபதேசித்த பாலகன் காப்பது
சிந்தை குளிர எம் தாய் எமக்கு ஊட்டிய
அமுதமொழியையே என
ஐயமற அறிந்துவிட்ட கணத்திலே
செருக்கெனக்கும் வாராதோ?
No comments:
Post a Comment