ரோஜாவின் வாசம் மனதை
ரம்யமாக ஈர்க்கும்!!
வண்ணங்கள் தீட்டிய இறைவனை எண்ணி
வியக்க வைக்கும் மலர்!!
அன்பை வெளிப்படுத்த
அழகு ரோஜா ஒன்றே போதும்!!
மலர்த்தோட்டத்தையே தன்
மணத்தால் நிரப்பும் வாசமலர்!!
ரோஜாவே....
முட்செடியில் நீ வசித்தாலும்
முகம் மலர்ந்து வாசம் வீசுகிறாய்...
உயரிய இப்பண்பை
எங்கிருந்து நீ கற்றாயோ??
ஒருவேளை...
மண்ணில் பிறக்கும்போதே
முகச்சுளிப்புக்களை மட்டுமே
முதல் பரிசுகளாய் பெற்றாலும்!!
கடந்து வரும் பாதைகள்
கடினமாயிருந்தாலும்...
நம்பிக்கையொளியை உலகிற்கு தர
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து...
புன்னகையோடு
புவியையே வெல்வார்களே அவர்களிடமிருந்தா??
No comments:
Post a Comment