முட்டையிலிருக்கும் கோழிக்குஞ்சு
முட்டி மோதினால் மட்டுமே வெளியுலக வாழ்வு பெறும்
கூட்டிலுறங்கும் புழுகூட வண்ணத்து பூச்சியாகிட
கட்டிப்போட்ட தளைகளை தகர்க்கும்
தெய்வச்சிலைகளின் கருணைபொங்கும் கண்கள்
செதுக்கிய உளியின் வலியை உணரும்
தேரோட்டத்தில் திசைமாற்றவே முட்டுக்கட்டை தேவை
போராட்டமே என்றும் முன்னேற்றும் வாழ்வை

No comments:
Post a Comment